ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Oct 2021 10:03 PM IST (Updated: 18 Oct 2021 10:03 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்:
மாவட்டம் முழுவதும் ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் குடிநீர் ஆபரேட்டர்களுக்கு சிறப்பு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும், ஊராட்சி செயலர்களுக்கு அரசு கருவூலம் மூலம் சம்பளம் வழங்க வேண்டும், ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்களுக்கு மாதம் ரூ.20 ஆயிரம் சம்பளமாக வழங்க வேண்டும், தூய்மை காவலர்களுக்கான சம்பளத்தை ரூ.3 ஆயிரத்து 600-ல் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஒன்றிய அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
வடமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் செல்வராணி தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர்கள் சங்க ஒன்றிய தலைவர் மோகன்தாஸ் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் மணிகண்டன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணி கோரிக்கைகளை பற்றி விளக்கினார். இதில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்துகொண்டனர். முடிவில் வட்டார பொருளாளர் கோவிந்தசாமி நன்றியுரை வழங்கினார்.
கொடைக்கானல், ஆத்தூர்
செம்பட்டியில் உள்ள ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சங்கத்தின் ஒன்றிய தலைவர் அழகர்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், குடிநீர் ஆபரேட்டர்கள் பணியாளர் சங்க ஒன்றிய தலைவர் பால்ராஜ், ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்க மாநில துணைச் செயலாளர் ஜேசுராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
இதேபோல் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஊரக வளர்ச்சித்துறை பணியாளர் சங்க மாவட்ட துணை தலைவர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். மாநில இணைச் செயலாளர் விஜய கர்ண பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி செயலர் சங்க தலைவர் அன்புச்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நத்தம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி செயலர்கள், குடிநீர் ஆபரேட்டர்கள் உள்பட ஊரக வளர்ச்சித்திட்ட பணியாளர்கள் கலந்துகொண்டனர். 
கொடைக்கானல் ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் துரைப்பாண்டி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வீரமணி முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சில்வர்ஸ்டர் வரவேற்றார். 15 அம்ச கோரிக்கைகள் குறித்து மாநில செயற்குழு உறுப்பினர் துளசிதாசன் பேசினார். முடிவில் ஒன்றிய பொருளாளர் கண்ணன் நன்றி கூறினார்.
பழனி, திண்டுக்கல்
பழனி ஒன்றிய அலுவலகம் முன்பு சங்கத்தின் ஒன்றிய தலைவர் தாம்பரநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட பொருளாளர் சாந்தி, ஊராட்சி செயலர் சங்க மாவட்ட பொருளாளர் கந்தசாமி மற்றும் குடிநீர் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் என பலர் கலந்துகொண்டனர். இதேபோல் தொப்பம்பட்டியிலும் ஊரக வளர்ச்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்துராமன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் கோபால், மாவட்ட செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

Next Story