வெட்டுவாணம் அருகே ஓடும் ஆம்புலன்சில் குவா, குவா


வெட்டுவாணம் அருகே ஓடும் ஆம்புலன்சில் குவா, குவா
x
தினத்தந்தி 18 Oct 2021 10:29 PM IST (Updated: 18 Oct 2021 10:29 PM IST)
t-max-icont-min-icon

ஓடும் ஆம்புலன்சில் குவா, குவா

வேலூர்

ஆம்பூர் டவுன் பகுதியை சேர்ந்தவர் சவுகத்அலி. இவரது மனைவி ஆயிஷா (வயது 25). நிறைமாத கர்ப்பிணியான அவர் நரியம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று அதிகாலையில் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனே 108 ஆம்புலன்சில் அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

ஆம்புலன்சை டிரைவர் தட்சிணாமூர்த்தி ஓட்டினார். வெட்டுவாணம் அருகே சென்றபோது ஆயிஷாவுக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் வினோசங்கர் பிரசவம் பார்த்தார். ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோதே ஆயிஷாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாய் மற்றும் குழந்தையை குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவரும் நலமாக உள்ளனர்.

Next Story