கன்னிவாடியில் விரைவில் பஸ் நிலையம் அமைக்கப்படும்; அமைச்சர் இ.பெரியசாமி பேச்சு


கன்னிவாடியில் விரைவில் பஸ் நிலையம் அமைக்கப்படும்; அமைச்சர் இ.பெரியசாமி பேச்சு
x
தினத்தந்தி 18 Oct 2021 10:53 PM IST (Updated: 18 Oct 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

கன்னிவாடியில் விரைவில் பஸ் நிலையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்தார்.

கன்னிவாடி:
கன்னிவாடியில் விரைவில் பஸ் நிலையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்தார். 
சமுதாய வளைகாப்பு
குழந்தைகள் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின்கீழ் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா, கன்னிவாடியில் உள்ள சமுதாய கூடத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் நிர்வாகி ஆர்.டி.ஆர். ராஜசேகரன், ரெட்டியார்சத்திரம் ஒன்றியக்குழு தலைவர் பிகே.சிவகுருசாமி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சத்தியமூர்த்தி, தி.மு.க. நகர செயலாளர் சண்முகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜேஷ் பெருமாள், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் முருகானந்தம், நிர்வாகி குமார், ஐ.ஏ.எஸ். கருப்பையா, கன்னிவாடி பேரூராட்சி செயல் அலுவலர் யவனராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கூட்டுறவுத்துறை அமைச்சரும், தி.மு.க. துணை பொதுச் செயலாளருமான இ.பெரியசாமி தலைமை தாங்கி, வளைகாப்பு விழாவில் கலந்துகொண்ட கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் மற்றும் 7 வகை உணவுகளையும் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- 
பஸ் நிலையம்
தி.மு.க. ஆட்சியில் தான் கன்னிவாடியில் இந்த சமுதாய கூடம் கட்டப்பட்டது. அதேபோல் கன்னிவாடியில் விரைவில் பஸ் நிலையம் அமைக்கப்படும். இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பஸ் நிலையம் அமைத்தவுடன் அனைத்து பஸ்களும் கன்னிவாடி ஊருக்குள் வந்து செல்லும். இதனால் கன்னிவாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயனடைவார்கள். கன்னிவாடியில் இருந்து தோணிமலை செல்லும் சாலை புதுப்பிக்கப்பட்டு, அங்கு பஸ்கள் இயக்கப்படும். இதற்கான முன்னெடுப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது. இங்கு விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். 
இந்த விழாவில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சக்தி (கசவனம்பட்டி), தேவிராகவன் (பன்றிமலை), அருணாச்சலம் (புதுப்பட்டி), பால்ராஜ் (கரிசல்பட்டி), சுந்தரி அன்பரசு (கொத்தப்புளி), ஒன்றிய கவுன்சிலர்கள் பிரபாகரன், முத்துகிருஷ்ணன், மிக்கேல் அம்மாள் ஜஸ்டின், விசுவாசம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்துப்பாண்டி, கன்னிவாடி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் பெருமாள், கசவனம்பட்டி ஊராட்சி துணை தலைவர் செல்வம், பன்றிமலை ஊராட்சி துணை தலைவர் கோபி, வட்டார மருத்துவ அலுவலர் செல்லமுத்து, டாக்டர் அங்கம்மாள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வம், சுகாதார ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் வேதா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story