‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 18 Oct 2021 10:55 PM IST (Updated: 18 Oct 2021 10:55 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-

வடிகால் வசதி வேண்டும்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலை ரவுண்டானா அருகே மழைநீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. மேலும் நீண்ட நாட்களாக மழைநீர் தேங்கி கிடப்பதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் தேங்கி கிடக்கும் நீரை தேடி பன்றிகள் வரத்தொடங்கி உள்ளன.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலை ரவுண்டானா அருகே மழைநீர் தேங்காதபடி மழைநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-முத்துக்குமரன், திருத்துறைப்பூண்டி.

குண்டும், குழியுமான சாலை

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் எடகீழையூர் ஊராட்சி   வடக்கு உடையார் தெருவில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும்,  குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மழை காலத்தில் மழை தண்ணீர் சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கி விடுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடக்கு உடையார்தெரு பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், வடக்கு உடையார்தெரு.

குப்பைகள் அகற்றப்படுமா?

திருவாரூர் மாவட்டம் விஜயபுரம் மார்கெட் சாலை, பள்ளிவாசல் சாலை, நாகைசாலை, ெரயில்வே கீழ்பாலம் சந்திப்பு, பழைய பள்ளிவாசல் போன்ற இடங்களில் குப்பைகள் மலை போல் தேங்கி கிடக்கிறது. காய்கறி கழிவு மற்றும் பழ கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. தற்போது மழை காலம் என்பதால் குப்பைகள் அழுகி விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
-முகமது கடாபி, கொடிக்கால்பாளையம்.

மின்விளக்குகள் எரியுமா?

திருவாரூர் புதிய பஸ் நிலையம் கடந்த 2019-ம் ஆண்டு திறக்கப்பட்டது.  இந்த பஸ் நிலையத்தில் உயரழுத்த மின் கோபுரம் உள்ளது. ஆனால் மின் விளக்குகள் பல மாதங்களாக எரிவது கிடையாது. இதனால் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் பஸ் நிலையத்தில் உள்ள பயணிகள் ஒய்வு அறைகள், பெண்கள் பாலுட்டும் அறைகள் முறையாக பராமரிக்கப்படாமல் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் சமூக விரோதிகளின் கூடாரமாக விளங்குகிறது. மது அருந்தி விட்டு தகராறிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகினறனர். எனவே திருவாரூர் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை பஸ் நிலையத்திற்குள் எரியாமல் உள்ள மின் விளக்குகளை எரிவதற்கு நடவடிக்கைப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
-பொதுமக்கள், திருவாரூர்.

Next Story