சரக்கு வேன் கவிழ்ந்து விவசாயி பலி 3 பேர் படுகாயம்
உத்தனப்பள்ளி அருகே சரக்கு வேன் கவிழ்ந்து விவசாயி பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
ராயக்கோட்டை:
உத்தனப்பள்ளி அடுத்த சாமனப்பள்ளி கூட்டுறவு சொசைட்டியில் உர மூட்டைகளை ஏற்றி கொண்டு எம்.தொட்டியை சேர்ந்த விவசாயிகள் முனியப்பன் (வயது 55), முருகன் (32) சம்பத் (28) ஆகியோர் சரக்கு வேனில் சென்றனர். இந்த வேனை சம்பத் என்பவர் ஓட்டி சென்றார். உத்தனப்பள்ளி அடுத்த பங்காநத்தம் சாலை வளைவில் திரும்பிய போது வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் நாகேஷ், முனியப்பன், முருகன், சம்பத் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முனியப்பன் உயிரிழந்தார். நாகேஷ், முருகன், சம்பத் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story