தொப்பூர் கணவாயில் லாரிகள் மோதல் டிரைவர் பலி


தொப்பூர் கணவாயில் லாரிகள் மோதல் டிரைவர் பலி
x
தினத்தந்தி 18 Oct 2021 10:56 PM IST (Updated: 18 Oct 2021 10:56 PM IST)
t-max-icont-min-icon

தொப்பூர் கணவாயில் லாரிகள் மோதல் டிரைவர் பலியானார்.

நல்லம்பள்ளி:
ஆந்திர மாநிலத்தில் இருந்து டைல்ஸ் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி, தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று இரவு வந்தது. இந்த லாரியை சேலம் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் (வயது30) என்பவர் ஓட்டி வந்தார். தொப்பூர் கணவாயை கடந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து காரணமாக தொப்பூர் கணவாயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story