தர்மபுரி அரசு கலைக்கல்லூரி முன்பு மாணவர்கள் சாலை மறியல்


தர்மபுரி அரசு கலைக்கல்லூரி முன்பு மாணவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 18 Oct 2021 10:56 PM IST (Updated: 18 Oct 2021 10:56 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அரசு கலைக்கல்லூரி முன்பு மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நல்லம்பள்ளி:
தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் வணிகவியல், கணக்கியல், அறிவியல் ஆகிய துறைகளுக்கான இறுதி கட்ட கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. இதில் விண்ணப்பம் செய்திருந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்றனர். பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்தது. இதில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தாங்கள் கேட்ட உரிய துறையை கலந்தாய்வில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனக்கூறி, கல்லூரி முன்பு அவர்கள் சேலம்-தர்மபுரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் வந்து மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story