குடும்ப கட்டுப்பாடு சிகிச்சைக்கு சென்ற பெண் உயிரிழந்தார்.


குடும்ப கட்டுப்பாடு சிகிச்சைக்கு சென்ற பெண் உயிரிழந்தார்.
x
தினத்தந்தி 18 Oct 2021 11:02 PM IST (Updated: 18 Oct 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு குடும்ப கட்டுப்பாடு சிகிச்சைக்கு சென்ற பெண் உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய உறவினர்கள் நடத்திய போராட்டம் இரவிலும் நீடித்தது.

காரைக்குடி, 
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு குடும்ப கட்டுப்பாடு சிகிச்சைக்கு சென்ற பெண் உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய உறவினர்கள் நடத்திய போராட்டம் இரவிலும் நீடித்தது.
இளம்பெண் சாவு
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே புதுவயல் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார். அவருடைய மனைவி தமிழ்ச்செல்வி (வயது 33) இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் தமிழ்ச்செல்வி புதுவயல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குடும்ப கட்டுப்பாடு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 
அங்கு பணியில் இருந்த மருத்துவ குழுவினர், மயக்க மருந்தினை செலுத்தியதாகவும், அதன்பின்னர் சிறிது நேரத்தில் தமிழ்ச்செல்வி உடல்நிலை மோசமானதாகவும் கூறப்படுகிறது.
உடனடியாக தமிழ்ச்செல்வி ஆம்புலன்ஸ் மூலம் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தவறான சிகிச்சையின் காரணமாகத்தான் தமிழ்ச்செல்வி இறந்ததாகவும், எனவே இதில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவருடைய உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
 உடனடியாக காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி, தாசில்தார் மாணிக்கவாசகம் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். ஆனாலும் அவர்கள் மாவட்ட கலெக்டர் வரவேண்டும் என கூறி ஆஸ்பத்திரி வளாகத்திலேயே சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு இருந்ததால் இரவிலும் பரபரப்பு நீடித்தது.

Next Story