பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
கரூர்
உத்தரபிரதேசத்தில் விவசாயிகளை கொலை செய்தோருக்கு தண்டணை கொடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையை 50 சதவீதமாக குறைக்க வேண்டும். 3 வேளாண் சட்டம் மற்றும் 4 தொழிலாளர் சட்டங்களையும் வாபஸ் வாங்க வேண்டும். பணமயமாக்கல் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்டு ரெட் ஸ்டார் மற்றும் தொழிற்சங்க மையம் இந்தியா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் பாரதிதாசன் தலைமை தாங்கினார். இதில் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story