விஷம் குடித்த தொழிலாளி சாவு
விஷம் குடித்த தொழிலாளி இறந்தார்.
கிருஷ்ணராயபுரம்
மாயனூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கே.பி குளத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 51). கூலி தொழிலாளி. இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் இறந்தார். இதுகுறித்து ரமேசின் மகன் குமரன் கொடுத்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story