தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Oct 2021 5:58 PM GMT (Updated: 18 Oct 2021 5:58 PM GMT)

மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரவக்குறிச்சி, 
ஆர்ப்பாட்டம்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு ஊராட்சி செயலாளர்கள் சங்க தலைவர் வடிவேல் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
10 ஆண்டுகளுக்கு மேலாக ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றிவரும் கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றிய அனைத்து நிலை ஊரக வளர்ச்சித்துறை பணியாளருக்கும் தமிழக அரசு அறிவித்த ரூ.15 ஆயிரம் ஊக்கத் தொகையை உடனே வழங்கக்கோரியும் என்பன உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 
தோகைமலை
இதேபோல் தோகைமலை ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஊராட்சி செயலாளர்கள் செந்தில்குமார், நேசமணி ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அனைத்து பணியாளர் சங்க மாநில இணைச் செயலாளர் வெங்கடேசன் கலந்துகொண்டு பேசினார்.  இதில் ஊராட்சி செயலாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணராயபுரம்
இதேபோல் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பாக கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
 இதற்கு சங்கத்தின் ஒன்றிய செயலாளர் தனபால் தலைமை தாங்கினார். இதில், சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைககளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
க.பரமத்தி
க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.  மாவட்ட தலைவர் வளர்மதி கோரிக்கையை வலியுறுத்தி விளக்கி சிறப்புரையாற்றினார். இதில் 50-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி துப்புரவு பணியாளர்கள், ஊராட்சி குடிநீர் ஆபரேட்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story