ஆற்றங்கரையில் புதைத்து வைத்திருந்த 600 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு


ஆற்றங்கரையில் புதைத்து வைத்திருந்த 600 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
x
தினத்தந்தி 18 Oct 2021 11:33 PM IST (Updated: 18 Oct 2021 11:33 PM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடி அருகே ஆற்றங்கரையில் புதைத்து வைத்திருந்த 600 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.

கறம்பக்குடி, 
ரகசிய தகவல்
கறம்பக்குடி பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக ஆலங்குடி மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதையடுத்து ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல், மதுவிலக்கு சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரி, பட்டத்திகாடு, கருக்காகுறிச்சி, வாணக்கன்காடு உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். 
அப்போது திருமணஞ்சேரி அக்னி ஆற்றின் கரையில் மணலில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 600 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் பள்ளம் தோண்டி பெரிய பிளாஸ்டிக் தொட்டியில் இருந்த சாராய ஊறலை வெளியில் எடுத்தனர். தொடர்ந்து அதே இடத்தில் சாராய ஊறலை கீழே கொட்டி அழித்தனர்.
விசாரணை
இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராய ஊறலை புதைத்து வைத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மதுவிலக்கு போலீசார் கூறுகையில் சாராய ஊறல் போடுவதற்கு யாரும் இடம் கொடுத்தால் அந்த நிலத்தின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 
எனவே நில உரிமையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும்.  மேலும் சாராய ஊறல் போடுவது, காய்ச்சுவது போன்ற செயல்கள் கிராம பகுதிகளில் நடைபெற்றால் பொதுமக்கள் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Next Story