ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்கள் முன்பும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில் 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் யூனியன் அலுவலகம் முன்பு சங்க ஒன்றியத்தலைவர் வைரமுத்து தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்க மாவட்ட துணை தலைவர் தட்சிணாமூர்த்தி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். ஒருங்கிணைப்பாளர் தனசேகரபாண்டியன் வாழ்த்திப் பேசினார். மூன்று ஆண்டு பணி முடித்த ஊராட்சி செயலருக்கு பதிவுரு எழுத்தருக்கான அனைத்து அரசு சலுகைகளையும் உடனே வழங்கிட கோரியும், ஊராட்சி செயலர் பணி காலத்தை கருத்தில்கொண்டு தேர்வு நிலை சிறப்பு நிலை ஊதியம் வழங்கிட வேண்டும் என்றும், ஊரக வளர்ச்சித் துறையில் அதிகரித்து வரும் அரசியல்அழுத்தத்தை தவிர்க்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. முன்னதாக சங்க ஒன்றிய செயலாளர் பாண்டிக்குமார் வரவேற்றார். முடிவில் ஒருங்கிணைப்பாளர் ஞானதுரை பாண்டி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story