குழாயால் அடித்து மாமனார் கொலை
குழாயால் அடித்து மாமனாரை கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர்.
மீன்சுருட்டி:
குடும்ப பிரச்சினை
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள மெய்க்காவல்புத்தூர் மெயின்ரோடு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 63). இவரது மனைவி தேவகி(52). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இதில் இரண்டாவது மகள் ஜெயந்தியை கடந்த 2014-ம் ஆண்டு ஜெயங்கொண்டம் அருகே உள்ள சின்னவளையம் தெற்குதெருவை சேர்ந்த கலியபெருமாளின் மகன் திலக்(38) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஜெயந்திக்கும், திலக்குக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக தனது தந்தை வீட்டிற்கு ஜெயந்தி வந்ததாக தெரிகிறது. ஒரு வாரம் கழித்து திலக் தனது 2 குழந்தைகளையும் ஆட்டோவில் செல்வராஜ் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். ேமலும் நேற்று முன்தினம் திலக், ெஜயந்திக்கு போன் செய்துள்ளார். அதை ஜெயந்தி எடுக்கவில்லை.
குழாயால் அடித்தார்
இதையடுத்து நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் மெய்க்காவல்புத்தூருக்கு வந்த திலக், செல்வராஜ் வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளார். ஆனால் கதவு திறக்கப்படாததால் அருகில் கிடந்த பிளாஸ்டிக் குழாயை எடுத்து, கதவில் அடித்து திறக்க முற்பட்டார். இந்நிலையில் செல்வராஜ் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தார். அப்போது திலக், தனது மனைவியை ஏன் அனுப்பி வைக்கவில்லை என்று கேட்டு, திட்டி குழாயால் செல்வராஜை அடித்ததில் அவர் கீழே விழுந்ததாகவும், உடனடியாக அந்த இடத்தில் இருந்து திலக் ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து செல்வராஜை மீட்டு ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தேவகி சேர்த்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், செல்வராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உடனடியாக அவர் அங்கிருந்து செல்வராஜின் உடலுடன் தனது வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது.
கைது
இதுகுறித்து தேவகி கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி வழக்குப்பதிவு செய்து, செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் திலக் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story