கொளத்தூர் அருகே சந்தனக்கடத்தல் வீரப்பனின் நினைவு நாள் அனுசரிப்பு


கொளத்தூர் அருகே சந்தனக்கடத்தல் வீரப்பனின் நினைவு நாள் அனுசரிப்பு
x
தினத்தந்தி 19 Oct 2021 2:00 AM IST (Updated: 19 Oct 2021 2:00 AM IST)
t-max-icont-min-icon

கொளத்தூர் அருகே சந்தனக்கடத்தல் வீரப்பனின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது

கொளத்தூர்
தமிழகம் மற்றும் கர்நாடக மாநில அரசுகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த சந்தனக்கடத்தல் வீரப்பன், கடந்த 2004-ம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் தமிழக அதிரடிப்படை போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். அவரது உடல் கொளத்தூரை அடுத்த மூலக்காடு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் வீரப்பனின் நினைவு நாளில் அங்கு அவருடைய குடும்பத்தினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று வீரப்பனின் 17-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவருடைய மனைவி முத்துலட்சுமி, மூத்த மகள் வித்யாராணி ஆகியோர் சமாதியில் மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உறவினர்கள், பொதுமக்கள், தமிழர் நீதிக்கட்சி தலைவர் சுப.இளவரசன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அப்போது முத்துலட்சுமி, வீரப்பனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
வீரப்பனின் நினைவு நாளையொட்டி கொளத்தூர் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களின் பெயர், ஊர் போன்ற விவரங்களை சேகரித்தனர். வீரப்பனின் இளைய மகளான பிரபாவதி கடந்த சில ஆண்டுகளாக அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story