மாணவர்கள் தகராறால் பரபரப்பு


மாணவர்கள் தகராறால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 Oct 2021 2:38 AM IST (Updated: 19 Oct 2021 2:38 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்கள் தகராறால் பரபரப்பு ஏற்பட்டது.

பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று காலையில் பள்ளிக்கூடத்துக்கு வழக்கம்போல் மாணவர்கள் சென்றனர். அப்போது மினி பஸ்சில் வந்த மாணவர்கள், பள்ளிக்கூட பஸ் நிறுத்தத்தில் இறங்கியபோது திடீரென்று தங்களுக்கிடையே மோதலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று, தகராறில் ஈடுபட்ட மாணவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து, மாணவர்களுக்கு அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story