வீட்டில் பதுக்கிய 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


வீட்டில் பதுக்கிய 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 19 Oct 2021 2:53 AM IST (Updated: 19 Oct 2021 2:53 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே வீட்டில் பதுக்கிய 7 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் தொழிலாளியை கைது செய்தனர்.

நெல்லை:
நெல்லை தாழையூத்து அருகே உள்ள ராம்நகரில் ஒரு வீட்டில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நெல்லை மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அந்த பகுதியில் உள்ள கட்டி முடிக்கப்படாத ஒரு வீட்டில் 100-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் 7 ஆயிரத்து 200 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த வீட்டின் உரிமையாளர் அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான கலைஞர் (வயது 48) என்பதும், வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கலைஞரை கைது செய்து, அங்கிருந்த ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.

Next Story