திருத்தணியில் கஞ்சா கடத்தி வந்த 3 வாலிபர்கள் கைது - கொலை முயற்சி வழக்குகளில் தொடர்பு இருப்பதாக தகவல்
திருத்தணியில் கஞ்சா கடத்தி வந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இதில் 2 வாலிபர்களை பிடித்து விசாரித்ததில், கொலை முயற்சி வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மத்தூர் ரெயில்வே கேட் பகுதியில் திருத்தணி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக ஆந்திராவில் இருந்து மிக வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி போலீசார் சோதனை செய்தபோது, அந்த வாகனத்தில் 1 கிலோ கஞ்சா மறைத்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
அதனை பறிமுதல் செய்த போலீசார், இருசக்கர வாகனத்தில் வந்த சந்துரு (வயது20), சக்கரை செல்வன் (19) ஆகிய 2 வாலிபர்களை பிடித்து விசாரித்ததில், இவர்கள் திருத்தணியில் சில நாட்களுக்கு முன்பு அருண் காந்தி மற்றும் ஆட்டோ டிரைவர் அபூபக்கர் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. இவர்களுக்கு உடந்தையாக இருந்த புருஷோத்தமன் (25) உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story