பா.ஜனதா மனிதாபிமானமற்ற முகத்தை காட்டுகிறது-சிவசேனா விமர்சனம்
மத்திய முகமைகளை தவறாக பயன்படுத்தி பா.ஜனதா தனது மனிதாபிமானமற்ற முகத்தை காட்டுகிறது என சிவசேனா விமர்சித்து உள்ளது.
மும்பை, அக்.
மத்திய முகமைகளை தவறாக பயன்படுத்தி பா.ஜனதா தனது மனிதாபிமானமற்ற முகத்தை காட்டுகிறது என சிவசேனா விமர்சித்து உள்ளது.
சொந்த வேலைக்கு..
சிவசேனா செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி. சாம்னாவில் சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற மத்திய விசாரணை முகமைகள் பா.ஜனதாவின் கூலிப்படைகள் போல வேலை செய்வதாக விமர்சித்து இருந்தார். இந்தநிலையில் சிவசேனா சாம்னாவில் மீண்டும் பா.ஜனதாவை கடுமையாக விமர்சித்து உள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வழக்கமாக மக்கள் தான் அரசில் நம்பிக்கை இழந்து விட்டதாக கூறுவார்கள். ஆனால் மராட்டியத்தில் அது எதிர்மறையாக உள்ளது. மாநிலத்தில் பா.ஜனதா நகைச்சுவையில் பெரிய பாத்திரமாக உள்ளது. பா.ஜனதா அவர்களின் சொந்த வேலைகளுக்கு சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவை பயன்படுத்துகின்றனர். அமலாக்கத்துறை, சி.பி.ஐ.யால் நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை உத்தவ் தாக்கரே அம்பலப்படுத்தி உள்ளார்.
மனிதாபிமானமற்ற முகம்
பா.ஜனதாவும், மத்திய அரசும் எந்த கேள்வியையும் எதிர்கொள்ளவது இல்லை. கேள்வி கேட்பவர்களை முடித்துவிடுகின்றனர். பா.ஜனதாவுக்கும் அவர்களின் அரசுக்கும் ஜனநாயகம், சட்டம்-ஒழுங்கில் நம்பிக்கை கிடையாது. அவர்கள் எதிர்கட்சிகளின் முதல்-மந்திரிகளை ஏற்றுக்கொள்வது இல்லை. அது அரசியலில் அவர்களின் தற்போதைய மனநிலையாக உள்ளது. தரம்குறைந்த புகையிலையை புகைப்பதால் தான் இதுபோன்ற எண்ணங்கள் எழுகின்றன. உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆனது குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் விளக்கம் அளித்துவிட்டார். தங்களது விரக்தியை வெளிப்படுத்தவே உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆனதை விமர்சித்து வருகின்றனர்.
மகாவிகாஸ் கூட்டணி தலைவர்களின் மீதான தாக்குதல்களை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவர்களின் குடும்பத்தினர் துன்புறுத்தப்படுவது பா.ஜனதாவின் மனிதாபிமானமற்ற முகத்தை காட்டுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-----------------
Related Tags :
Next Story