“புதுச்சேரியில் விரைவில் 100% தடுப்பூசி செலுத்தப்படும்” - தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை
புதுச்சேரி விரைவில் 100% பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாநிலமாக மாறும் என துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் உள்ள மேல்சாத்தமங்கலத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில் தற்போது வரை 80 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் 10 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story