சாலையோர காய்கறி கடைகள் அகற்றம்
திருப்பூர் தென்னம்பாளையம் உழவர் சந்தைக்கு முன்பு சாலையோரம் அமைக்கப்பட்ட காய்கறி கடைகள் அகற்றப்பட்டன.
திருப்பூர்
திருப்பூர் தென்னம்பாளையம் உழவர் சந்தைக்கு முன்பு சாலையோரம் அமைக்கப்பட்ட காய்கறி கடைகள் அகற்றப்பட்டன.
காய்கறி கடைகள்
திருப்பூர் தென்னம்பாளையம் உழவர் சந்தையில் 120 கடைகள் உள்ளன. 400 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இங்கு வியாபாரம் செய்ய பதிவு செய்துள்ளனர். ஆனால் உழவர் சந்தைக்கு வெளியே உள்ள சாலையோரம் காய்கறி கடைகள் அமைத்து சிலர் வியாபாரம் செய்வதால் உழவர் சந்தை விவசாயிகள் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்து வந்தனர். மேலும் போக்குவரது இடையூறும் ஏற்பட்டு வருகிறது. சாலையோர கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கலெக்டரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
இந்தநிலையில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி உத்தரவின் பேரில் நேற்று காலை உழவர் சந்தைக்கு முன்புறம் சாலையோரம் அமைக்கப்பட்ட காய்கறி கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினார்கள். ஆணையாளர் அங்கு வந்து ஆய்வு செய்ததுடன், சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக கடை அமைத்தால் காவல்துறையினர் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்தார்.
ஸ்மார்ட் சிட்டி பணிகள்
இதைத்தொடர்ந்து பாட்டையப்பன் நகர், கொங்குமெயின் ரோடு, பெரியதோட்டம், பெரிய பள்ளிவாசல் வீதி, கோர்ட்டு வீதியில் உள்ள அரசு பள்ளி உள்ளிட்டவற்றை ஆணையாளர் ஆய்வு செய்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்று வரும் குடிநீர், மின்விளக்குகள், சாலைப்பணிகளை பார்வையிட்டார். இந்த பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வில் உதவி அணையாளர்கள் வாசுகுமார், செல்வநாயகம், சுகாதார அதிகாரிகள் ராமச்சந்திரன், ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story