அரூர் அருகே தொழிலாளி கொலை வழக்கில் தந்தை மகன் கைது


அரூர் அருகே தொழிலாளி கொலை வழக்கில் தந்தை மகன் கைது
x
தினத்தந்தி 19 Oct 2021 10:16 PM IST (Updated: 19 Oct 2021 10:16 PM IST)
t-max-icont-min-icon

அரூர் அருகே தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டு வனப்பகுதியில் வீசப்பட்ட வழக்கில் தந்தை மகனை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி:
அரூர் அருகே தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டு வனப்பகுதியில் வீசப்பட்ட வழக்கில் தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளி கொலை
தர்மபுரி மாவட்டம் அரூர் வனச்சரக பகுதியில் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் கூட்டாத்துப்பட்டி பகுதியை சேர்ந்த தொழிலாளி பாபு என்கிற பாபுராஜ் (வயது 38) என்பவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது சிட்லிங்கை சேர்ந்த விஜயகுமார் (40), அவருடைய மகன் விக்னேஷ்( 20) ஆகியோருக்கு இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், தந்தை-மகனை பிடித்து தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. 
மிரட்டல்
விஜயகுமார் அருள்வாக்கு சொல்லி வந்துள்ளார். இவருக்கும், வேலனூரை சேர்ந்த பெண் ஒருவருக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பாபுராஜுக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அப்போது பாபுராஜ் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. 
இதுபற்றி அறிந்த விஜயகுமார், பாபுராஜை எச்சரித்துள்ளார். அப்போது நானும் ரவுடி தான் என்று பாபுராஜ், விஜயகுமாரை மிரட்டி உள்ளார். இதன் காரணமாக அச்சமடைந்த விஜயகுமார் சம்பவ நாளான்று பாபுராஜை வரவழைத்து அதிகளவில் மது அருந்த வைத்துள்ளார். பின்னர் அவர் புஷ்பராஜை கொலை செய்து வனப்பகுதியில் உடலை வீசியுள்ளார்.
கொலை 
கொலைக்கான தடயங்களை அழிக்க விஜயகுமாரின் மகன் விக்னேஷ் உதவி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், தந்தை, மகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கொலை வழக்கில் தந்தை-மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story