விழுப்புரத்தில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை அபேஸ்
விழுப்புரத்தில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை அபேஸ் செய்தவரை போலீசாா் தேடி வருகின்றனா்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே உள்ள கொண்டங்கி கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி மங்கையர்கரசி (வயது 60). சம்பவத்தன்று மங்கையர்கரசி தனக்கு உடல்நிலை சரியில்லை என்று தனது கணவருடன் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்தார்.
அங்கு சிகிச்சை பெற்றுக் கொண்டு மீண்டும் வீட்டிற்கு செல்ல பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஒரு பஸ்சில் ஏறி, புதிய பஸ் நிலையத்துக்கு சென்றார். அப்போது, அவர் கழுத்தில் அணிந்திருந்த 9½ பவுன் தங்க நகையை மர்ம மனிதர்கள் அபேஸ் செய்து சென்று விட்டனர்.
இதன் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. பஸ்சில் பயணம் செய்த போது, 25 வயதுடைய ஒரு பெண், மங்கையர்கரசி அருகே நின்று ஏதோ ஒரு பவுடரை அவா் மீது தூவி உள்ளார். இதன் மூலம் அந்த பெண் தான் நகையை அபேஸ் செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் விழுப்புரம் மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சர்குணம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story