அருணாசலபிரதேசத்தில் பணியில் இருந்த ராணுவ வீரர் திடீர் சாவு


அருணாசலபிரதேசத்தில் பணியில் இருந்த ராணுவ வீரர் திடீர் சாவு
x
தினத்தந்தி 19 Oct 2021 10:27 PM IST (Updated: 19 Oct 2021 10:27 PM IST)
t-max-icont-min-icon

அருணாசலபிரதேசத்தில் பணியில் இருந்த வடமதுரையை சேர்ந்த ராணுவ வீரர் உடல்நலக்குறைவால் திடீரென்று இறந்தார்.

வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள வாலிசெட்டிபட்டியை சேர்ந்தவர் சடையப்பன் (வயது 43). இவர், அருணாசலபிரதேச மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் சடையப்பன் பணியில் இருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மயங்கி விழுந்தார்.
 இதையடுத்து அவரை சக ராணுவ வீரர்கள் மீட்டு, சிகிச்சைக்காக அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சடையப்பன் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடல், விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் நேற்று இரவு அவரது சொந்த ஊரான வாலிசெட்டிபட்டிக்கு உடல் கொண்டுவரப்பட்டது. 
இதற்கிடையே சடையப்பனின் உடல் இன்று (புதன்கிழமை) அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இறந்த சடையப்பனுக்கு பழனியம்மாள் (35) என்ற மனைவியும், ஹரிஹரன் (19) என்ற மகனும், பிரியங்கா (17) என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பணியில் இருந்த ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் வாலிசெட்டிபட்டி கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

Next Story