மீனவர் வலையில் சிக்கிய100 கிலோ எடை கொண்ட திருக்கை மீன்


மீனவர் வலையில் சிக்கிய100 கிலோ எடை கொண்ட திருக்கை மீன்
x
தினத்தந்தி 20 Oct 2021 12:16 AM IST (Updated: 20 Oct 2021 12:16 AM IST)
t-max-icont-min-icon

மீனவர் வலையில் சிக்கிய100 கிலோ எடை கொண்ட திருக்கை மீன் சிக்கியது.

கோட்டைப்பட்டினம்:
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதிகளிலிருந்து நேற்று முன்தினம் விசைப்படகு மூலம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். பின்னர் அவர்கள் வழக்கம் போல் மீன் பிடித்துக்கொண்டு நேற்று கரை திரும்பினர். 
அப்போது மீனவர் ஒருவர் வலையில் சுமார் 100 கிலோ எடை கொண்ட திருக்கை மீன் சிக்கியது. இதையடுத்து மீனவர்கள் அதை கரைக்கு கொண்டு வந்தனர். இதனை அப்பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து சென்றனர். 

Next Story