ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்


ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Oct 2021 12:20 AM IST (Updated: 20 Oct 2021 12:20 AM IST)
t-max-icont-min-icon

ரிஷிவந்தியம் ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரிஷிவந்தியம், 
பகண்டை கூட்டுரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட துணைத்தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோரின் கோரிக்கையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் ஒன்றிய துணைத்தலைவர் கருத்தான், துணைச் செயலாளர் ஜெயமுருகன், பொருளாளர் வேல்முருகன், உறுப்பினர்கள் சுப்பிரமணியன், சக்திவேல், குப்புசாமி, கிருஷ்ணவேணி, லட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Next Story