அன்பூண்டி சின்ன ஏரி நிரம்பியதால் 10 ஏக்கர் பயிர்கள் சேதம்


அன்பூண்டி சின்ன ஏரி நிரம்பியதால் 10 ஏக்கர் பயிர்கள் சேதம்
x
தினத்தந்தி 20 Oct 2021 12:25 AM IST (Updated: 20 Oct 2021 12:25 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் அருகே உள்ள அன்பூண்டி சின்ன ஏரி நிரம்பியதால் 10 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளது. வீடுகளுக்குள்ளேயும் தண்ணீர் புகுந்துள்ளது.

வேலூர்

வேலூர் அருகே உள்ள அன்பூண்டி சின்ன ஏரி நிரம்பியதால் 10 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளது. வீடுகளுக்குள்ளேயும் தண்ணீர் புகுந்துள்ளது.

சின்ன ஏரி

வேலூர் அருகே அன்பூண்டியில் சின்ன ஏரி உள்ளது. பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு ஏரியாக நிரம்பி வருகிறது. அன்பூண்டி சின்ன ஏரிக்கும் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் கடந்த 17-ந் தேதி ஏரி நிரம்பி கோடிபோனது. இந்த ஏரி நிரம்பியதால் அதன் கரையோரம் உள்ள உள்ள விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் பல ஏக்கர் பயிர்கள் சேதம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

பயிர்கள் சேதம்

அன்பூண்டியில் உள்ள சின்ன ஏரிக்கு தண்ணீர் வரத்து இருந்தால் அதன் அருகே உள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்துவிடும். ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறும் மதகு பகுதி சுமார் 2 அடி உயரம் கட்டப்பட்டுள்ளதால் ஏரிக்கு தண்ணீர் வரத்து வரும் நேரத்தில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கிவிடும். தற்போது விவசாயிகள் வெண்டை, கத்தரி, வேர்க்கடலை, பூக்கள் போன்றவற்றை பயிரிட்டிருந்தனர். இவை அனைத்தும் மூழ்கிவிட்டது. சுமார் 10 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதுதவிர சில வீடுகளுக்குள்ளேயும் தண்ணீர் புகுந்துள்ளது. அவர்கள் வீடுகளில் வசிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

சிலர் வேறு இடங்களுக்கு தற்காலிகமாக குடிஅமர்ந்துள்ளனர். கால்நடைகளும் நீரில் வசிக்கும் சூழல் உள்ளது. அவற்றுக்கு பயன்படுத்தப்படும் வைக்கோலும் நீரில் மிதக்கிறது. மதகு பகுதியை உயர்த்தி கட்டியதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடும், விவசாய நிலம் மற்றும் வீடுகளில் தண்ணீர் புகாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story