ராட்சத அலையில் சிக்கி பெங்களூரு வாலிபர் மாயம்
நண்பர்களுடன் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி பெங்களூரு வாலிபர் மாயமானார்.
புதுச்சேரி, அக்.20-
நண்பர்களுடன் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி பெங்களூரு வாலிபர் மாயமானார்.
ராட்சத அலையில் சிக்கினார்
பெங்களூருவை சேர்ந்தவர்கள் அரவிந்த் (வயது 22), விஜய் (21), கவுசிக் (23), பவன் (22). நண்பர்களான இவர்கள் தசரா விடுமுறைக்காக புதுவைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா வந்தனர். விடுதியில் தங்கியிருந்து புதுச்சேரியில் உள்ள பல்வேறு சுற்றுலா இடங்களை அவர்கள் பார்வையிட்டனர்.
நேற்று மதியம் புதுவை கடற்கரைக்கு அரவிந்த் நண்பர்களுடன் வந்தார். அங்கு காந்தி சிலை அருகே கடலில் இறங்கி அவர்கள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். சற்று ஆழமான பகுதிக்கு சென்று அரவிந்த் குளித்தபோது திடீரென்று எழுந்த ராட்சத அலை அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றது.
தேடும் பணி தீவிரம்
இதுபற்றி தகவல் அறிந்த பெரியகடை போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கடற்படை, மீனவர்கள் உதவியுடன் படகுகளில் சென்று கடலில் மூழ்கிய அரவிந்தை தீவிரமாக தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு நேரம் ஆனதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.வாலிபர் கடலில் மூழ்கிய சிறிது நேரத்திலேயே அந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் பலர் கடலில் இறங்கி குளித்தனர். அவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பினர்.
____
Related Tags :
Next Story