நீதிமன்ற உத்தரவை பொறுத்து நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை


நீதிமன்ற உத்தரவை பொறுத்து நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை
x
தினத்தந்தி 20 Oct 2021 12:33 AM IST (Updated: 20 Oct 2021 12:33 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தல் குறித்து நீதிமன்ற உத்தரவை பொறுத்து நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

வில்லியனூர், அக்.20-
உள்ளாட்சி தேர்தல் குறித்து நீதிமன்ற உத்தரவை பொறுத்து நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
கொரோனா தடுப்பூசி முகாம்
வில்லியனூர் அருகே உள்ள மேல்சாத்தமங்கலம் பகுதியில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கவர்னர் தமிழசை சவுந்தரராஜன் கலந்து முகாமை தொடங்கிவைத்து பேசினார். 
விழா முடிவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தனிப்பட்ட காரணங்கள் மற்றும் கொரோனா வந்து சில நாட்கள் மட்டும் ஆவதால் பலர் தடுப்பூசி போடாமல் உள்ளனர். அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. விரைவில் அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு, 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்ட மாநிலமாக புதுச்சேரி மாறும். 
இன்னும் 2 லட்சம் பேர் தடுப்பூசி போடாமல் உள்ளனர். மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நலத்திட்ட உதவிகள்
உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க முடியவில்லை என்று கேட்டதற்கு, இது தொடர்பான வழக்கு நாளை (வியாழக் கிழமை) நீதிமன்றத்தில் விசாரணைக்கு           வர உள்ளது. தேர்தல் தள்ளிவைத்து தீர்ப்பு வந்தால், இது சம்பந்தமாக உத்தரவு வெளிவரும். இவ்வாறு அவர் கூறினார்.
தடுப்பூசி முகாமில் சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமலு, டாக்டர்கள் ராஜம்பாள், ரகுநாதன், பிரேமா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story