திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 20 Oct 2021 12:37 AM IST (Updated: 20 Oct 2021 12:37 AM IST)
t-max-icont-min-icon

திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

திருவெறும்பூர்,அக்.20-
திருச்சியை அடுத்த திருவெறும்பூர் ரெயில் நிலையம் வழியாக தஞ்சாவூர்,  குடந்தை மன்னார்குடி, மயிலாடுதுறை, சென்னை ரெயில்கள் சென்று வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் இங்குள்ள நடைமேடையில் உள்ள ஒரு கம்பத்தில் 27 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார்.
அவர் வெள்ளை நிற சட்டையும், ஊதா மற்றும் அரக்கு நிறம் கலந்த கால்சட்டையும் அணிந்து இருந்தார். இதைகண்ட ரெயில் பயணிகள் திருவெறும்பூர் ரெயில்நிலைய அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். அவர்கள் திருச்சி ரெயில்நிலைய போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை.
 இது குறித்து கூத்தைபார் கிராமநிர்வாக அலுவலர் ராதிகா கொடுத்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? எனவிசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story