மாவட்ட செய்திகள்

வீட்டில் பட்டாசு தயாரித்த 8 பேர் கைது + "||" + Arrested

வீட்டில் பட்டாசு தயாரித்த 8 பேர் கைது

வீட்டில் பட்டாசு தயாரித்த 8 பேர் கைது
வெம்பக்கோட்டை பகுதியில் வீட்டில் பட்டாசு தயாரித்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாயில்பட்டி, 
வெம்பக்கோட்டை பகுதியில் வீட்டில் பட்டாசு தயாரித்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். 
பட்டாசு தயாரிப்பு 
வெம்பக்கோட்டை அருகே உள்ள வெற்றிலையூரணி, விஜயகரிசல்குளம், அரசரடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வீடுகளில் அனுமதி இன்றி பட்டாசு தயாரிப்பதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமமூர்த்தி, வேல்சாமி ஆகியோர் தலைமையில் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த விஜயகரிசல்குளத்தை சேர்ந்த கணேசன் (வயது 45), வெற்றிலையூரணியைசேர்ந்த முனியசாமி (40), ஜெயராஜ் (42), சுப்புராஜ் (50), கண்ணன் (35) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து  தலா 20 கிலோ சரவெடிகளைபறிமுதல் செய்தனர்.
3 பேர் கைது 
அதேபோல தாயில்பட்டி அருகே உள்ள கீழகோதைநாச்சியார்புரத்தில் வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதாக புகார்கள் வந்தன. அதன்பேரில்  வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வீடுகளில் சோதனை நடத்தினார். அப்போது பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த கொடியரசு (வயது 50), கண்ணன் (36), வெள்ளை மருது (40) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து தலா 20 கிலோ சரவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுவரை சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த 32 பேர் வெம்பக்கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1½ லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

தொடர்புடைய செய்திகள்

1. வெளிநாடு தப்பிச்சென்ற முக்கிய குற்றவாளி கைது
வெளிநாடு தப்பிச்சென்ற முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
2. 16 வயது சிறுமியை கடத்திய பெயிண்டர் கைது
ஈரோட்டில் 16 வயது சிறுமியை கடத்திய பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.
3. திண்டிவனம் அருகே கடையில் திருடிய வாலிபர் கைது
திண்டிவனம் அருகே கடையில் திருடிய வாலிபர் கைது
4. பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொந்தரவு செய்தவர் கைது
பணகுடி அருகே பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொந்தரவு செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
5. கொள்ளையில் தொடர்புடைய போலீஸ் ஏட்டு கைது
அருப்புக்கோட்டையில் நடந்த துணிகர ெகாள்ளையில் கொள்ளையில் தொடர்புடைய போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டார்.