சித்தராமையாவுக்கு காவியை பார்த்தால் பயம் - மந்திரி சுனில்குமார் பேட்டி
சித்தராமையாவுக்கு காவியை பார்த்தால் பயம் என்று மந்திரி சுனில்குமார் கூறினார்.
பெங்களூரு:
மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
எல்லை மீறக்கூடாது
சித்தராமையாவுக்கு காவியை பார்த்தால் பயம். போலீசார் காவி துண்டு போட்டு பூஜை செய்ததை அவர் எதிர்க்கிறார். அவர்கள் பசுமை துண்டை போட்டு கொண்டால் அதை அவர் எதிர்ப்பாரா?. காவியை இன்று எதிர்ப்பவர்கள் நாளை நெற்றியில் குங்குமம் வைப்பதையும் எதிர்பார்கள். இதை நாங்கள் சகித்து கொள்ள வேண்டுமா?. ஒருவரை பற்றி பேசும்போது அது எல்லை மீறக்கூடாது.
ஆர்.எஸ்.எஸ். பற்றி சித்தராமையா கடுமையாக குறை கூறி பேசுகிறார். பிரதமர் மோடியை ஒருமையில் திட்டுகிறார். அவருக்கு கலாசாரம் தெரியவில்லை. தங்கள் கட்சி தலைவர்களை திருப்திப்படுத்த அவர் அவ்வாறு பேசுகிறாரா?. ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் தான் நாங்கள் இந்த அளவுக்கு வளர்ந்துள்ளோம். ஆழ்.எஸ்.எஸ். என்றால் சேவை, தியாகம் என்று அர்த்தம்.
தலைமை பண்பு
இதை எல்லாம் தெரியாமல் சித்தராமையா பேசுவதை பார்க்கும்போது, அவருக்கு ஞானம் குறைவாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். பிரதமரை ஒருமையில் பேசினால் அவரது தலைமை பண்பு குறைந்துவிடாது.
அவரது தலைமை குணம் எந்த அளவுக்கு கீழ்த்தரமாக உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள். அவரை பார்த்து கற்று கொள்ளும் குணம் குறைந்துவிட்டது. எதிர்க்கட்சி தலைவர் பிறருக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
இவ்வாறு சுனில்குமார் கூறினார்.
Related Tags :
Next Story