சிறுமியை பலாத்காரம் செய்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் ஆசைவார்த்தை கூறி 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அதை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். இந்நிலையில் ஜெயங்கொண்டம் விளந்தையை சேர்ந்த பழனிவேலின் மகன் சிவகுமார்(27) என்பவர், பிரகாசுடன் இருந்ததை வீட்டில் சொல்லி விடுவதாக மிரட்டி அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் கர்ப்பமான அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்தது. இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி ஏற்கனவே பிரகாசை கைது செய்து, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
இதில் தலைமறைவாக இருந்த சிவகுமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலை கதிரவன், அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின்பேரில் சிவகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சிவகுமாரை திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
Related Tags :
Next Story