4-வது மனைவி இறந்த சோகத்தில் முதியவர் தற்கொலை


4-வது மனைவி இறந்த சோகத்தில்  முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 20 Oct 2021 2:05 AM IST (Updated: 20 Oct 2021 2:05 AM IST)
t-max-icont-min-icon

4-வது மனைவி இறந்த சோகத்தில் முதியவர் தற்கொலை

வாழப்பாடி, அக்.20-
வாழப்பாடி அருகே 4-வது மனைவி இறந்த சோகத்தில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4-வது மனைவி சாவு
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே முத்தம்பட்டி சென்னாக்குட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 66). இவர் ஆடுகளை வளர்த்து வந்தார். இவர் திருமணம் செய்து கொண்ட 3 பெண்களும் இவருடன் இல்லாததால், நான்காவதாக பழனியம்மாள் (60) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கும் குழந்தைகள் இல்லை. இருவர் மட்டுமே வசித்து வந்தனர்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த பழனியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் தனிமையில் வசித்து வந்ததால் மனமுடைந்து காணப்பட்ட முதியவர் சுப்பிரமணி, நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். 
இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தொழிலாளி சுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
முதியவர் தற்கொலை
ஏற்கனவே 3 பெண்களை திருமணம் செய்தும் குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் நான்காவதாக தன்னுடன் வாழ்ந்த வந்த மனைவியும் இறந்து போனதால், தனிமையில் வசித்து வந்த சுப்பிரமணி, கடந்த சில தினங்களாக மனமுடைந்த காணப்பட்டதும், இதில் விரக்தியடைந்து தனது வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து முதியவர் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story