நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினர் ஆய்வு
ஒரத்தநாடு பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்
ஒரத்தநாடு;
ஒரத்தநாடு பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்
மத்திய குழுவினர் ஆய்வு
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு பகுதியில் உள்ள தென்னமநாடு, புதூர் ஆகிய கிராமங்களில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இந்திய உணவுக் கழகத்தின் மத்திய அரசு உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சகத்தின் துணை இயக்குனர் முகமது ஷாகிர்கான் தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மத்திய அரசின் உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சக துணை இயக்குனர் முகமதுஷாகிர்கான் கூறியதாவது
தமிழக விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்கின்றனர். தற்போது வடகிழக்கு பருவமழை காலம் என்பதால், நெல்லின் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. எனவே தமிழக அரசு சார்பில் நெல்லின் ஈரப்பத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
அறிக்கை
இதன்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனைக்காக கொட்டி வைத்திருக்கும் நெல் மணிகளின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் அங்குள்ள ஈரப்பதமானி கருவி மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனை செய்ய வந்த விவசாயிகளிடமும் கருத்துக்களை கேட்டறிந்து அவர்களுடைய கோரிக்கைகளையும் இணைத்து ஆய்வறிக்கை தயார் செய்யப்பட உள்ளது. இந்த அறிக்கை இன்னும் 15 நாட்களுக்குள் மத்திய அரசிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மத்திய அரசின் உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சக துணை இயக்குனர் முகமது ஷாகிர்கான் கூறினார். ஆய்வின் போது தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ்ஆலிவர், மத்திய அரசின் உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சக தொழில்நுட்ப அலுவலர்கள் பிரபாகரன், யூனுஸ், இணை மேலாண்மை இயக்குனர் சங்கீதா, நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் உமா மகேஸ்வரி, தஞ்சை வேளாண்மை துறை இணை இயக்குனர் ஜஸ்டின் மற்றும் அரசு அலுவலர்கள் இருந்தனர்.
Related Tags :
Next Story