சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
அம்பையில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்பை:
அம்பாசமுத்திரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடந்த ஆட்சிக்காலத்தில் தங்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா காலம் என்பதனை கூறி 10 சதவீத போனஸ் மட்டுமே வழங்கினார்கள். தற்போது புதிய ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் தங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 20 சதவீத போனஸில் இருந்து பணி சுமை காரணமாக 25 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வாணிப கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் அம்பாசமுத்திரம் சங்க கிளை தலைவர் ராஜகோபால் தலைமையில் தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story