மழையால் சேதம் அடைந்த நெற்பயிர்களை பார்வையிட்ட கலெக்டர்
புளியரையில் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த நெற்பயிர்களை, மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ் பார்வையிட்டார்.
செங்கோட்டை:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை பகுதியில் மழை வெள்ளத்தால் தட்சிணாமூர்த்தி கோவிலுக்கு அருகில் இருக்கும் சாஸ்தான்குளம் கால்வாய், சின்ன குற்றாலம் கால்வாய் மற்றும் தாட்கோ அருகில் உள்ள குரங்கு நடைபாலம் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது.
இதனால் வயல்வெளிகளில் தண்ணீர் புகுந்தது. இதில் ஏராளமான ஏக்கரில் நெற்பயிர்கள் சேதம் அடைந்தன.
இதனை மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ் நேரில் சென்று பார்வையிட்டார். இதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்துராஜா, வேளாண்மை உதவி இயக்குனர் கனகம்மாள், செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக்மைதீன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சகாய இளங்கோவன், முன்னோடி விவசாயி கென்னடி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story