காபியில் அதிக அளவு தூக்கமாத்திரை கலந்து மகனுக்கு கொடுத்து விட்டு தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி


காபியில் அதிக அளவு தூக்கமாத்திரை கலந்து மகனுக்கு கொடுத்து விட்டு தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி
x
தினத்தந்தி 20 Oct 2021 8:02 AM IST (Updated: 20 Oct 2021 8:02 AM IST)
t-max-icont-min-icon

விருகம்பாக்கம் அருகே காபியில் அதிக அளவு தூக்கமாத்திரை கலந்து மகனுக்கும் கொடுத்து விட்டு தானும் குடித்து மூதாட்டி தற்கொலைக்கு முயன்றார்.

பூந்தமல்லி, 

விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமத்தில் உள்ள மதியழகன் நகரை சேர்ந்தவர் சுப்பையா. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி தமிழரசி (வயது 66). இவரது மகன் பாலமுருகன் (49). பாலமுருகன் கடந்த 30 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் இவர் தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்ததால் தினமும் தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைப்பதை பெற்றோர் வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்த நிலையில் மகனின் நிலை எண்ணி மன உளைச்சலில் இருந்த தமிழரசி நேற்று முன்தினம் இரவு மகனை கொலை செய்யும் நோக்கில் தூக்க மாத்திரையை பொடியாக்கி அதிக அளவில் காபியில் கலந்து மகனுக்கும் கொடுத்து விட்டு தானும் குடித்துள்ளார். இதையடுத்து நேற்று அதிகாலை மயக்க நிலையில் இருந்த இருவரையும் சுப்பையா மீட்டு, வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story