கோவில்பட்டியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு வீரவாஞ்சி நகரில் குடியிருக்கும் பொதுமக்கள், இந்திய கம்யூனிஸ்டு் கட்சி மாவட்ட செயலாளர் வக்கீல் எஸ்.அழகு முத்து பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பரமராஜ், தாலுகா செயலாளர் பாபு மற்றும் குடியிருக்கும் மக்கள் கலந்து கொண்டார்கள்.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும் உதவி கலெக்டர் சங்கர நாராயணனை சந்தித்து மனு கொடுத்தார்கள். மனுவில் கூறி இருந்ததாவது:-
2008-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதி வீரவாஞ்சி நகரிலுள்ள 44 பேருக்கு தமிழக அரசு சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. பட்டா பெற்றவர்கள் வீடுகள் கட்டி குடியிருந்து வருகிறார்கள். இவர்கள் நிரந்தரமாக வீடு கட்டுவதற்கு வங்கிகளில் கடன் பெற, மனு செய்யும்போது இலவச பட்டா பெற்றவர்களுக்கு அடங்கல் கேட்கிறார்கள். தமிழக அரசு உயர்ந்த நோக்கத்தோடு, ஏழை மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கியது. அந்த நோக்கம் நிறைவேறும் பொருட்டு அடங்கல் பதிவுகளை வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளனர்.
மனுவை பெற்றுக்கொண்ட உதவி கலெக்டர் சங்கரநாராயணன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றார்கள்.
Related Tags :
Next Story