கோவில் செயல் அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்த பெண் கைது


கோவில் செயல் அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்த பெண் கைது
x
தினத்தந்தி 20 Oct 2021 7:39 PM IST (Updated: 20 Oct 2021 7:39 PM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் செயல் அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் செயல் அலுவலராக கலைவாணன் (வயது 57) என்பவர் பணிபுரிந்து வருகிறார். உடன்குடி விநாயகர் காலனியை சேர்ந்த துர்காதேவி (45) என்பவர் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அனுமதியின்றி தங்கி வந்துள்ளார். இங்கு தங்குவற்கு அனுமதி இல்லை என்று கோவில் பணியாளர்கள் பலமுறை கூறியுள்ளனர். ஆனால் அவர் அதை கேட்கவில்லை. இந்தநிலையில் கோவில் மேற்கு வாசலில் உள்ள விநாயகர் கோவில் பின்புறம் துர்காதேவி அரிவாளால் தேங்காய் உடைத்து பக்தர்களுக்கு இடையூறு செய்துள்ளார்.
இதனால் கோவில் செயல் அலுவலர் கலைவாணன், அவரை சற்று தள்ளி நிற்குமாறு கூறியுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் துர்காதேவி தன்னை அவதூறாக பேசி, அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக குலசேகரன்பட்டினம் போலீசில் கலைவாணன் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குப்பதிவு செய்து துர்காதேவியை கைது செய்தார்.

Next Story