தீப்பெட்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தீப்பெட்டி தொழிலாளர்கள், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்க தலைவர் பாலமுருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். விடுதலை மக்கள் இயக்க பொதுச்செயலாளர் முருகேசன், சேகர், ரத்தினவேல், இலவச வீடு கேட்டு மனு செய்த தீப்பெட்டி தொழிலாளி முருகலட்சுமி, மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் கலந்து கொண்டார்கள்.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும் உதவி கலெக்டர் சங்கர நாராயணனை சந்தித்து தீப்பெட்டி தொழிலாளி முருகலட்சுமி மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நான் கோவில்பட்டி புது ரோட்டில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறேன். தீப்பெட்டி தொழிற்சாலையில் கூலிவேலை செய்து வருகிறேன். பிரதமர் மோடி திட்டத்தில் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் இலவச வீடு கொடுத்தார்கள். அதை வாங்க சென்றபோது ரூ.1.5 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை கேட்டார்கள். எனக்கு பணம் கொடுக்க வசதி இல்லாத தால் அந்த வீட்டை பணம் உள்ளவர்களுக்கு மாற்றி விட்டார்கள். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுக்க உள்ள வீடு திட்டத்தில் எங்களுக்கு இடைத்தரகர்கள் இல்லாமல் வீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story