தீ விபத்தில் வீடு சேதம் அடைந்து பாதித்தவர்களுக்கு நிவாரண உதவி- அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்


தீ விபத்தில் வீடு சேதம் அடைந்து பாதித்தவர்களுக்கு நிவாரண உதவி- அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
x
தினத்தந்தி 20 Oct 2021 8:36 PM IST (Updated: 20 Oct 2021 8:36 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தீ விபத்தில் வீடு சேதம் அடைந்து பாதித்தவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் நிவாரண உதவி வழங்கினார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் தீ விபத்தில் வீடு சேதம் அடைந்தவர்களுக்கு நிவாரண உதவியை அமைச்சர் கீதாஜீவன் நேற்று வழங்கினார்.

நிவாரண உதவி

தூத்துக்குடி பண்டுகரை பகுதியில் இயற்கை இன்னல்கள், தீ விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வீடுகள் சேதம் அடைந்த நபர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. 
 நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சமூ கநலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவித்தொகையை வழங்கினார்.

நடவடிக்கை

இது குறித்து அமைச்சர் கீதாஜீவன் கூறும் போது, தமிழக முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் உடனுக்குடன் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தூத்துக்குடி வட்டம் பண்டுகரை பகுதியில் தீ விபத்தின் காரணமாக சேதம் அடைந்த வீடுகளை பார்வையிட்டு குடிசை வீடு சேதம் அடைந்த நபர்களுக்கு நிவாரண உதவி வழங்க உத்தரவிடப்பட்டது. வீடு முழுமையாக சேதம் அடைந்தவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், பகுதி சேதம் அடைந்தவர்களுக்கு ரூ.4 ஆயிரத்து 100-ம் வழங்கப்பட்டது. மொத்தம் 7 பேருக்கு ரூ.33 ஆயிரத்து 200 நிவாரண தொகையாக வழங்கப்பட்டு உள்ளது. அரிசி, பருப்பு மற்றும் உடை உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளன. மேலும் அந்த பகுதி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கு உரிய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. வரும் காலங்களில் இது போன்ற விபத்து ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்று கூறினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி கலெக்டர் சிவசங்கரன், தாசில்தார் ஜஸ்டின், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story