சிங்காரப்பேட்டையில் காங்கிரஸ் சார்பில் நாற்று நடும் போராட்டம்
சிங்காரப்பேட்டையில் காங்கிரஸ் சார்பில் நாற்று நடும் போராட்டம் நடந்தது.
கல்லாவி:
சிங்காரப்பேட்டை பஸ் நிலையம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை பணியை விரைந்து முடிக்க கோரி நாற்று நடும் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு செல்லக்குமார் எம்.பி. தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நடராஜன், மாநில செயலாளர் ஆறுமுகம், எஸ்.சி., எஸ்.டி. அணி மாநில துணை செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து அங்கு சாலையில் தேங்கி நின்ற தண்ணீரில் கட்சியினர் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வட்டார தலைவர்கள் திருமால், அயோத்தி, ரவி, மாது, தனஞ்ஜெயன், ஊராட்சி மன்ற தலைவர் அகமது பாஷா, நகர தலைவர் விஜயகுமார், பேரூராட்சி முன்னாள் தலைவர் பூபதி, பாலமந்திர் பள்ளி நிறுவனர் காமராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story