திருக்கடையூரில், விவசாயிகள் சாலை மறியல்


திருக்கடையூரில், விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 20 Oct 2021 9:57 PM IST (Updated: 20 Oct 2021 9:57 PM IST)
t-max-icont-min-icon

பயிர் காப்பீட்டு தொகை கூடுதலாக வழங்கக்கோரி திருக்கடையூரில் தில்லையாடி ஆர்ச் முன்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருக்கடையூர்:
பயிர் காப்பீட்டு தொகை கூடுதலாக வழங்கக்கோரி திருக்கடையூரில் தில்லையாடி ஆர்ச் முன்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
சாலை மறியல் போராட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் சுற்றுப்பகுதிகளில் தமிழக அரசு 2020-2021-க்கான பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு பயிர் காப்பீட்டு தொகை அரசு அறிவித்துள்ளது. இந்தநிலையில் தில்லையாடி ஊராட்சியை சேர்ந்த விவசாயிகளுக்கு 8 சதவீத தொகை மட்டுமே வந்துள்ளதாக கூறப்படுகிறது. 
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதலாக காப்பீட்டு தொகை வழங்கக்கோரி நேற்று திடீரென திருக்கடையூர் ஊராட்சிக்கு உட்பட்ட தில்லையாடி ஆர்ச் முன்பு தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சு வார்த்தை நடத்தப்படும்
இதனையறிந்த பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, தரங்கம்பாடி தாசில்தார் ஹரிதரன், திருக்கடையூர் கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார் ஆகியோர் விரைந்து வந்து, சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் உங்களின் கோரிக்கை தொடர்பாக  தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கூறினர். இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். 
இதில் விவசாய சங்க தலைவர்கள் பாவாடைசாமி, கலியபெருமாள், துணைத் தலைவர் கணேசன், செயலாளர் சதீஷ், துணை செயலாளர் சந்தானகிருஷ்ணன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story