போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 20 Oct 2021 10:00 PM IST (Updated: 20 Oct 2021 10:00 PM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையம் அருகே பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை ேபாக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

உத்தமபாளையம்: 

உத்தமபாளையம் அருகே உள்ள க.புதுப்பட்டியை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 24). இவர், பிளஸ்-1 மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரத்குமாரை கைது செய்தனர். 

Next Story