கயத்தாறில் பலத்த மழை


கயத்தாறில் பலத்த மழை
x
தினத்தந்தி 20 Oct 2021 10:07 PM IST (Updated: 20 Oct 2021 10:07 PM IST)
t-max-icont-min-icon

கயத்தாறில் பலத்த மழை பெய்தது.

கயத்தாறு:
கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் 2 மணி முதல் 3 வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் கீழபஜார் மற்றும் மதுரை மெயின் ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கயத்தாறு, கடம்பூர் மற்றும் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் மக்காச்சோளம்,  உளுந்து சாகுபடி செய்துள்ளனர். மழையால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story