போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்


போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்
x
தினத்தந்தி 20 Oct 2021 10:13 PM IST (Updated: 20 Oct 2021 10:13 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் மிலாது நபியை முன்னிட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாணவர் அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவை சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மது ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் ஜாமியா பள்ளிவாசல் முன்பு நடந்தது. நிகழ்ச்சிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச்செயலர் கே.ஏ.எம்.முகமது அபுபக்கர் தலைமை தாங்கினார். விழிப்புணர்வு பிரசாரத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி பிரசாரத்தில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில துணைச் செயலர் இப்ராஹிம் மக்கீ, மாவட்ட தலைவர் மீராஷா, செயலர் மஹ்முதுல் ஹசன், முஸ்லிம் மாணவர் பேரவை மாவட்ட பொறுப்பாளர் முபாரக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கும் பணியை பொதுச் செயலர் முகமது அபுபக்கர் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகளவு போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாகவும், அதனால்தான் கட்சியின் மாணவர் அமைப்பு சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தெரிவித்தார்.

Next Story