மாவட்ட செய்திகள்

பெண்ணை தாக்கி நகை,பணம் பறிப்பு + "||" + robbury

பெண்ணை தாக்கி நகை,பணம் பறிப்பு

பெண்ணை தாக்கி நகை,பணம் பறிப்பு
பெண்ணை தாக்கி நகை,பணம் பறித்தவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
ராமநாதபுரம், 
திருப்புல்லாணி அருகே உள்ள பெரியபட்டிணம் தெற்கு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த செல்வம் மனைவி பாண்டியம்மாள் (வயது27). இவர் தனது வயிற்றில் உள்ள நீர்க்கட்டிக்கு மருத்துவம் பார்க்க வேண்டி ராமநாதபுரத்தில் உள்ள அண்ணன் மனைவியிடம் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கிவிட்டு அரசு டவுன் பஸ்சில் ஏறி பெரியபட்டிணம் வந்துள்ளார். அங்கிருந்து ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது சங்கு கம்பெனி அருகில் மர்ம நபர் ஒருவர் பாண்டியம்மாளை பிடித்து கீழே தள்ளிவிட்டு அவர் கழுத்தில் கிடந்த தாலிசங்கிலி உள்ளிட்ட 4 பவுன் தங்க நகைகளை பறித்து கொண்டு அவர் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை பறித்து தப்பி ஓடிவிட்டார். கீழே விழுந்ததில் நிலைகுலைந்த பாண்டியம்மாள் நகை பணம் முதலியவற்றை பறித்து செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்து கத்தி கூச்சலிட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் விரைந்து வருவதற்குள் மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் திருப்புல்லாணி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆபாச படம் அனுப்பி கரூர் வங்கி பெண் அதிகாரி கணவரிடம் பணம் பறிப்பு
ஆபாச படம் அனுப்பி கரூர் வங்கி பெண் அதிகாரியின் கணவரிடம் பணம் பறித்த மர்ம ஆசாமி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2. திருச்சியில் டாஸ்மாக் ஊழியரை அரிவாளால் வெட்டி பணம் பறிப்பு
திருச்சியில் ரூ.100-க்கு பீர் கேட்டு தகராறில் ஈடுபட்டு டாஸ்மாக் ஊழியரை அரிவாளால் வெட்டி பணம் பறித்த 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
3. நூதனமுறையில் ஆன்லைனில் பணம் பறிப்பு
நூதனமுறையில் ஆன்லைனில் பணம் பறிப்பு.
4. கத்தியை காட்டி மிரட்டி ரூ.4 ஆயிரம் பறிப்பு
கணவன்-மனைவியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.4 ஆயிரம் பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
5. தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறிப்பு; வாலிபர் கைது
தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறிப்பு; வாலிபர் கைது