ஆட்டோ, மோட்டார் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஆட்டோ, மோட்டார் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Oct 2021 10:41 PM IST (Updated: 20 Oct 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தக்கோரி ஆட்டோ, மோட்டார் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி: 

தேனி பழைய பஸ் நிலையம் அருகில் தேனி மாவட்ட ஆட்டோ மற்றும் மோட்டார் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும், வீடு இல்லாத ஆட்டோ தொழிலாளர்களுக்கு இலவசமாக வீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இதற்கு மாவட்ட தலைவர் காசிராஜா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாண்டி, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ரவிமுருகன் மற்றும் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story