மாவட்ட செய்திகள்

மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிப்பு + "||" + robbury

மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிப்பு

மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிப்பு
மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறித்த நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அருகே உள்ள களத்தாவூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி அழகம்மாள் (வயது72). இவர் ராமநாதபுரம் வந்து அரண்மனை பகுதியில் காய்கறி வாங்கிவிட்டு திரும்பி ஊர் செல்ல காத்திருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் தனது தங்கை மகளுக்கு நகை எடுக்க வேண்டும் நீங்கள் அணிந்துள்ள சங்கிலி நன்றாக உள்ளது என்று கூறி அதனை கழற்றி தருமாறும் பார்த்துவிட்டு தருவதாக கூறியுள்ளார். அவரின் பேச்சை நம்பி மதிமயங்கிய அழகம்மாள் 2¼ பவுன் தங்க சங்கிலி நகையை கழற்றி கொடுத்துள்ளார். அதனை பார்ப்பதுபோல் நடித்த மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் ஏறி மாயமாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அழகம்மாள் கத்தி கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து விசாரித்தனர். ஆனால் அதற்குள் மர்ம நபர் தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து அழகம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மூதாட்டியிடம் நகை பறிப்பு
மானாமதுரையில் வீட்டு வாசலில் கோலம் போட்ட மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்டது.
2. பெண்ணிடம் நகை பறிப்பு
பெண்ணிடம் நகை பறித்த நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
3. பெண்ணிடம் நகை பறிப்பு
அருப்புக்கோட்டையில் பெண்ணிடம் நகை பறித்த சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
4. இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
இளையான்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது. இது தொடர்பாக 2 மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
5. வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு
வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.